×

பழநியில் ரயில் முன் பாய்ந்து மருந்து நிறுவன பிரதிநிதி தற்கொலை

பழநி, பிப். 17:பழநியில் இருந்து நேற்று முன்தினம் மாலை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றிருந்த நபர் ஒருவர் செல்போனை வீசி எறிந்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவர் வைத்திருந்த பான் அட்டை மூலம் அந்நபர் நாகர்கோவிலைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வெங்கடகிருஷ்ணன் (48) என்பது தெரியவந்தது.

தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. பழநி ரயில்வே போலீசார் வெங்கிடகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வெங்கடகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Drug company representative ,suicide ,Palani ,
× RELATED கொரோனா பாதிப்பு என வீடியோ வைரலானதால்...