×

உன்னத் பாரத் அபியான் திட்டத்தில் 5 கிராமங்கள் தத்தெடுப்பு

பழநி, பிப். 17:பழநியில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளது. பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் மூலம் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் துவக்கி விழா நிகழ்ச்சி கலிக்கநாயக்கன்பட்டியில் நடந்தது. கல்லூரியின் முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திட்ட அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தின் மூலம் கிராமங்களின் வீட்டுக்கணக்கெடுப்பு மற்றும் கிராம விபரம் சேகரிப்பு, எளிய முறையிலான வீட்டு உபகரண பராமரிப்பு, சுற்றுப்புறத்தூய்மை, வங்கி செயல்பாடுகள், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெறும் வழிமுறை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோகிலா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Villages ,
× RELATED ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு