×

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

பெரம்பலூர், பிப்.17: பெரம் பலூரில் மலைபோல் குவி ந்து கிடக்கும் மார்க்கெட் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பெரம்பலூர் பழைய பஸ் டாண்டின் வடபுறத்தில் தினசரி காய்கறி மார்க் கெட்உள்ளது. வளாகத்தில் உள்ள வாடகைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், தரைக்கடைகளுடன் சேர் த்து அதிலுள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளின் காய்கறி கழிவுகள் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு மேற்குப்பகுதியில் உள்ள சின்ன நடைபாதையில் தான் கொட்டப்படுகிறது.
வேப்பந்தட்டை தாலுகா வைச் சேர்ந்தவர்களும், ஆத்தூர் சாலையிலிருந்து பெரம்பலூர் வரக்கூடிய வெளியூர்க்காரர்களும் இந்தந டைபாதையை பயன் படு த்தித்தான் நகரின் வர்த்தக மையமாகத் திகழும் பழை ய பஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றனர்.அதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் டாண்டைச் சுற்றியுள்ள பகு திகளில் கடைகளில் பணி புரிந்து விட்டோ, பொருட்க ளை வாங்கிக்கொண்டோ ஆத்தூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு செல்ல இந்த நடைபாதையைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய அள வில் காணப்படும் இந்த நடைபாதையை பெரிதும் ஆக்கிரமித்தபடி மார்க்கெட் குப்பைகள் மலைபோல் கொட்டப்படுகின்றன. இதில் 80 சதவீத குப்பைகள் காய்கறிக் கழிவுகளாக உள்ளதால் அவற்றை தின்ன வருகின்ற தெருக்களில் கேட்பாரற்று சுற்றித்தி ரியும் மாடுகள், கிண்டிக் கிளறி குப்பைகளை பல மீட்டர் சுற்றளவுக்கு பரப்பி வைத்து விடுகின்றன. அதோடு நகராட்சி நிர்வாகம் குறித்த காலத்தில் அவற்றை அப்புறப்படுத்தாததால் காய்கறிக் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகின்றன. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கான கட்ட ணமில்லாக் கழிப்பறை இல்லாததால் பாதசாரிகள் குப்பைகளின் மீதே சிறுநீர் கழித்துவிட்டு சென்று விடு கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதா ர சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் அபாயத்தை உணர் ந்து நகராட்சி நிர்வாகம் குப்பைகளை விரைந்து அகற்றி சுத்தமான நகரா ட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொ துமக்கள் சமூக ஆர்வலர்க ள் வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.

Tags : road ,bus stand ,Perambalur ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு