×

நாகை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டலாமா? நீதிமன்றம் செல்ல பொதுதொழிலாளர் சங்கம் முடிவு

மயிலாடுதுறை,பிப்.17: மருத்துவக்கல்லூரிக்கு இடம் குறித்த உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முதல்வரே அடிக்கல் நாட்டிட முயற்சிப்பதா. எனவே நீதிமன்றத்தை அணுக மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும் எனக்கோரி மயிலாடுதுறையில் அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், சேவை சங்கத்தினர் உள்பட பலர் போராடி வரும் வருகினறனர். இந்நிலையில் வரும் மார்ச் 7ம் தேதி தமிழக முதல்வர் நாகப்பட்டிணம் அருகே அடிக்கல் நாட்ட உள்ளார்.
இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கு தொடர்ந்த வரும், பொது தொழிலாளர் சங்க தலைவருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாகை மாவட்டத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியை எங்கே அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டலாமா. இதுகுறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Naga Foundation ,court ,General Labor Association ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...