×

டெல்டா சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை சட்டமாக்க வேண்டும்

கரூர், பிப்.17: காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலசங்கம் தலைவர் ராஜாராம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கட்டளை கதவணைக்கு கீழ் அனைத்து காவிரி பாசன மாவட்ட பகுதிகளையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக இயக்க வேண்டும். கிராமப் புறங்களிலே இயங்கி வரும் அரசு சார்ந்த உழவர் ஆய்வு மன்றம் உழவர் விவாத குழுக்களை புதுப்பித்து வேளாண் மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்களாக மாற்ற உத்தரவிடவேண்டும்.
வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணயம் ஆணையம் அமைக்க வேண்டும். கர்நாடகத்தில உள்ளதைவிட சிறந்த வேளாண் கொள்கையை தமிழகத்தில் உருவாக்க சட்டம் கொண்டுவந்து, வேளாண் சந்தைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதற்கென தனி அமைச்சர் நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் வேளாண் துறை சார்ந்த பணிகளை கவனிக்க வேளாண், தோட்டக்கலை, வேளாண் சந்தை துறை, நீர்வள மேலாண்மை துறை என நான்கு அமைச்சர்களை உருவாக்கி தனித்தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் காவிரிபாசன பரப்பு மண்டலத்திற்கு ஒரு சிறப்பு பல்கலைக் கழகம் திருச்சியிலோ, தஞ்சையிலோ அமைக்க வேண்டும். அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு தீர்வு காண இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகள், வியாபாரிகள், ஒப்பந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கு சரியான வழிகாட்டுதலுடன் சிறந்த சட்டம் இயற்றப்பட வேண்டும். அழுகும் பொருட்களை பதப்படுத்தி மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற 8 இடங்களில் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் குழுக்களை அமைக்க அரசு அனுமதித்துள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த முக்கிய குறியீடுகளை தமிழ்நாடு அரசு வரும் சட்டசபையிலேயே அறிவிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்