×

பனியன் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

அவிநாசி,பிப்.17:பெருமாநல்லூர் அருகே தட்டாங்குட்டை சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் மதியமாயாண்டி(30). பனியன் தொழிலாளி. இவரது அம்மா கிருஷ்ணவேணி மற்றும் மனைவி பத்மாதேவி மற்றும் இவரது தங்கை ஆகியோருடன் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த பிப்ரவரி 11ம் தேதியன்று சாமி கும்பிட திருநெல்வேலி சென்றார். ஊரிலிருந்து நேற்று திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவில் இருந்த தங்க மோதிரம்,வெள்ளி விளக்குகள், வளையல்கள் மற்றும் உண்டியல் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.   இதுகுறித்த  புகாரின்பேரில், பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Tags : Theft ,home ,Banyan ,
× RELATED வீடு, கடையில் நகை, பணம் திருட்டு