×

திருமலைராயசமுத்திரத்தில் பயறு உற்பத்தியை பெருக்க தொழில் நுட்ப ஆலோசனை

புதுக்கோட்டை, பிப்.17: புதுக்கோட்டை அருகே உள்ள திருமலைராயசமுத்திரத்தில் உலக பயறு தினம் நடைபெற்றது.இதற்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திருப்பதி தலைமை தாங்கி பேசுகையில், பயறு தேவை உற்பத்தி, பயறு உற்பத்தியை பெருக்க தொழில் நுட்பங்களையும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட இனங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பயறு தொழில் நுட்ப கையேடு வழங்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி பயறு சாகுபடி நுட்பங்கள், அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.வேளாண்மை அலுவலர் கருப்பையா பயறு விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விதை நேர்த்தி முறைகளை செயல்விளக்கம் செய்து காட்டினார். தொடர்ந்து பயறு விதை நுண்சத்து மற்றும் நுண்ணுயிர் பாக்கெட்டுகள் மானியத்தில் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டி, முன்னோடி விவசாயி முத்துலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Thirumalairayasamudram ,
× RELATED கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா...