×

நாளை காதலர் தினம் ரோஜா பூக்களின் விலை விர்ர்ர்

பழநி, பிப். 13: நாளை காதலர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரோஜாக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இக்கொண்டாட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரோஜா விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூபாய் 5க்கு விற்பனையாகி கொண்டிருந்த ரோஜாவின் விலை தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூபாய் 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலையேற்றத்தின் போதும் ரோஜாவின் விற்பனை குறைவில்லாமல் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழநியை சேர்ந்த ரோஜா விற்பனையாளர் பிரபு கூறியதாவது, ‘பெரும்பாலும் ரோஜா மலர்கள் பெங்களூர், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தேவை அதிகரிப்பின் காரணமாக அதிகளவில் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. தட்டுப்பாட்டின் காரணமாகவே இவ்விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிறது. எனினும் விற்பனை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவு உள்ளது’ என்றார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்