×

வத்தலக்குண்டு குன்னுவாரன்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

வத்தலக்குண்டு, பிப். 13: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தமிகழத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்.2 முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதன்படி வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடந்தது.

Tags :
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...