×

சிறுவர் பூங்காவில் மண் கொட்டியதால் பரபரப்பு

உடுமலை, பிப். 13: உடுமலை நகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட சிறுவர் பூங்காவில் மண் கொட்டியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். உடுமலை நகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட அனுசம் நகர், யு.எஸ்.எஸ். காலனி பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மாலை நேரத்தில் முதியவர்கள் நடைபயிற்சி செல்கின்றனர். மாணவர்கள் கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இரவோடு இரவாக, பூங்கா முழுவதும் மலைபோல் மண்ணை மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நடைபயிற்சிக்கும், விளையாட சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக மண்ணை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இல்லாவிட்டால் உடுமலை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : park ,
× RELATED இரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்