×

வால்பாறையில் ரத்த வங்கி ஏற்படுத்த கோரிக்கை

வால்பாறை,பிப்.13:  வால்பாறை பகுதியில் ரத்த வங்கி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை பகுதியில் ஸ்டேன்மோர், முருகாளி, உருளிக்கல், ஐயர்பாடி, முடீஸ் ஆகிய 5 எஸ்டேட்களில் மருத்துவமனைகள் உள்ளது. மேலும் வால்பாறை அரசு மருத்துவமனை 100 ஆண்டுகளை கடந்து  செயல்பட்டு வருகிறது. அடிப்படை மருத்துவ சேவையை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வால்பாறையில் மருத்துவமனைகள் இருந்தும் வால்பாறை பகுதியில் தோட்ட தொழிலாளா–்கள் பயனடையும் வகையில், அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவமனைகள் இல்லை. மேலும் சுவாச கருவிகள், உயிர்காக்கும் கருவிகள் நிறைந்த மருத்துவமனைகள் இல்லை. ஸ்கேன் செய்ய வேண்டுமானாலும், எலும்பு முறிவு சிகிச்சையானாலும், பொள்ளாச்சி மற்றும் கோவை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், வால்பாறையில் ரத்த வங்கி இல்லை. அறுவை சிகிச்சை செய்யும் போது, ரத்தப்போக்கு ஏற்பட்டால் நிலைமை மோசமாகிவிடும். எனவே ரத்தவங்கி மிக அவசியம், ரத்த வங்கி வால்பாறையில் இருந்தால் சிறப்பான மருத்துவம் மேற்கொள்ள முடியும் என்றனர்.

எனவே வால்பாறையில் ரத்த வங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், ரத்த வங்கி வால்பாறையில் செயல்பட்டால், ஏழை தோட்ட தொழிலாளா–்கள் மற்றும் பொதுமக்கள் மேல் சிகிச்சை பெற முடியும். எனவே பொதுமக்களின் நலன் கருதி வால்பாறையில் அரசு ரத்த வங்கி ஏற்படுத்த உரிய கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valparai ,
× RELATED ஆழியார்-வால்பாறை மலைப்பாதையில்...