×

கொரோனா வைரஸ் பீதி கரூர் ரயில் நிலையத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

கரூர், பிப்.13: கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து, கரூர் ரயில் நிலையத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சைனாவில் உருவாகி உலகம் முழுதும் பீதியை கொரோனா வைரஸ் கிளப்பி வருகிறது. இதன் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் ரயில்வே நிலைய வளாகத்தில் நேற்று காலை பணியாளர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் நேற்று சிறப்பு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி...