×

அரசு பஸ் மோதி முதியவர் பலி

பணகுடி, பிப்.13:  பணகுடி அருகே கலந்தபனையைச் சேர்ந்தவர் பாலசிங் (74). இவர் நேற்று காலை கலந்தபனையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டார். பைபாஸ் ரோட்டை குறுக்காக கடந்த போது நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ், சைக்கிள் மீது  மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசிங் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை...