×

நன்னடத்தை விதிகளை மீறிய நபருக்கு சிறை

சிவகங்கை, பிப். 12: சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்தவர் விமல் (எ) விமல்ராஜ் (25). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தகராறுகளில் ஈடுபட்டு வந்ததால் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு ஜூலை.24ல் சிவகங்கையில் உள்ள ஆர்டிஓ நீதிமன்றத்தில் 110வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆஜர் படுத்தினார். இந்த வழக்கை விசாரணை செய்த ஆர்டிஓ செல்வகுமாரி குற்றம் சாட்டப்பட்ட விமல்ராஜ் ஒரு ஆண்டு எவ்வித தகராறுகளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவித்தார். இதன் பின்னர் விமல்ராஜ், கடந்த மாதத்தில் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள ஒரு கடையில் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிவகங்கையில் மினிபஸ்சில் டிரைவருடன் தகராறு செய்துள் ளார். இதை யடுத்து சிவ கங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு விமல்ராஜை செய்து கைது செய்தனர்.  இந்த சம்பவங்களை தொடர்ந்து சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர்மோகன் சிவகங்கை ஆர்டிஓ கோர்ட்டில் நிபந்தனையை மீறி தகராறில் ஈடுபட்டது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த ஆர்டிஓ செல்வகுமாரி குற்றம் சாட்டபட்ட விமல்ராஜ்க்கு 5 மாதம் 16 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.  

Tags :
× RELATED முதியவருக்கு 6 ஆண்டு சிறை