×

பாலமேடு மகாலிங்க சுவாமி குருபூஜை விழா

அலங்காநல்லூர், பிப். 12: மதுரை மாவட்டம் பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பாக குருநாதர் மகாலிங்க சுவாமி 60ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. ஆயில்ய நட்சத்திரத்தை ஒட்டி அங்குள்ள சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது. சுவாமிக்கு பால், பழம் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களும் பல்வேறு வண்ண மலர்களாலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்களுக்கு வஸ்திர தானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடத்து கமிட்டி நிர்வாகிகள் ராஜேந்திரன், வேலு, மனோகரவேல் பாண்டியன், உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Palamedu Mahalinga Swami Kurupuja Festival ,
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு