×

தென்னூரில் புனித லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

ஜெயங்கொண்டம், பிப். 4: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் 174வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி தென்னூர் பங்குத்தந்தை கிளிப் சந்தியாகு தலைமையில் கொடியேற்றம், திருப்பலி நடந்தது. விழாவையொட்டி கடந்த 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு திருப்பலி, சிறிய தேர்பவனி நடக்கிறது. வரும் 10ம் தேதி மாலை மறைவட்ட முதன்மை குரு ரோச்அலெக்சாண்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி, புனித லூர்து அன்னையின் அலங்கார ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 11ம் தேதி காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

Tags : St. Lourdes Mother Temple ,
× RELATED தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய விழா