×

250 மாணவ, மாணவிகள் பங்கேற்பு அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி

அரியலூர், ஜன. 30: அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2019-2020ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடை பணி நடக்கிறது. இதனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களான திருமழப்பாடி, கங்கைகொண்ட சோழபுரம், தா.பழூர், வாழைக்குறிச்சி, புரந்தான், முட்டுவாஞ்சேரி, காரைக்குறிச்சி, பெரியாத்துக்குறிச்சி, ஆண்டிமடம், சன்னாசிநல்லூர், குழுமூர் ஆகிய கிராமங்களில் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. எனவே அருகில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

இன்று முதல் இயங்கும் பெரம்பலூரில் மாணவர்களுக்காக பாலியல் வன்கொடுமையை தடுக்க போலீஸ் கிளப்

பெரம்பலூர்,ஜன.30: பள்ளி மாணவர்களுக்கான போலீஸ் கிளப், குழந்தைகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பெரம்பலூரில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் கூறினார். பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான போலீஸ் கிளப்பை தொடங்கி வைத்த திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் போலீஸ் கிளப் தொடங்கப்பட் டுள்ளது. இந்த போலீஸ் கிளப் 3 நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் நோக்கமாக, 18 வயதுக்கு கீழுள்ள பெண்களும், 21வயதுக்கு கீழுள்ள ஆண்களும் திருமணம் செய்வதை தடுப்பதற்காகவும், 2வது நோக்கமாக போக்சோ சட்டம் எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி மாணவ-மாணவியர் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, கையாளுவது குறித்தும், கணினி தொடர்பான குற்றங்களை தடுப்பது, அதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மூன்றாவதாக, ஏதாவது பாலியல் தொடர்பான, இக்கட்டான சூழலில் குழந்தைகள் சிக்கிக்கொண்டால், அந்தச்சூழலில் இருந்து அவர்கள் பத்திரமாக மீண் டு வருவதற்காக தற்காப் புக் கலைகள் பற்றிய பயி ற்சி அளிப்பது, ஆகிய 3 நோக்கங்களுக்காக இந்த போலீஸ்கிளப் பெரம்பலூ ர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 பள்ளிகளில் தொட ங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த போலீஸ் கிளப் திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரை தொடர்ந்து அடுத்ததாக அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட் டங்களிலும் போலீஸ் கிளப் தொடங்கப்பட உள்ளது. இந்த போலீஸ் கிளப்பில் பயி ற்சி பெறும் மாணவ, மாணவியர் தங்கள் பள்ளியில் உள்ள மற்ற மாணவ,மாண வியருக்கும் தாங்கள் வசிக் கக்கூடிய கிராமங்களிலுள் ள மாணவ மாணவியருக் கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய தூதுவர்களாக செயல்படுவார்கள். அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் அடிக்கடி இவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருவார்கள். இத்திட்டம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் போலீஸ் கிளப் விரைவில் தொடங்கப்படும். முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சாலைப் பாதுகாப்பை பொருத்தமட்டில் ஒருபுறம் விபத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டத்தை அமலாக்கம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விபத்துகள் நடக்க காரணமாக உள்ள 6 காரணங் களைக் கண்டறிந்து அதன்படி வழக்குப் பதிவு செய்யபட்டு வருகிறது. அதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இறந்து விடாமல் தடுப்பதற்காக கட்டாய ஹெல்மெட் அணிவது மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. எவ்வளவு முயன்று சட்டத்தை அமல்படுத்தி வந்தாலு ம் தவிர்க்க முடியாத சூழலில் விபத்துகள் நடந்தபடிதான் உள்ளது. இதற்காக விபத்து நடந்த இடத்தை காவல் துறையினர், நெடுஞ்சாலைதுறையினர், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் ஆய்வு செய்து, அப்பகுதியில் மீண் டும் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கிராமப்புறங்களில், நகர் புறங்களில் சந்துக்கடைகளில் மதுபானங்கள் சட்டத் தைமீறிவிற்கப்பட்டால், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது 100 என்ற, புகார் எண் மூலம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருச்சி சரக டிஐஜி தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பல்வேறு பணிகளுக்காக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் வெங்காயம் சாகுபடி செய்து அறுவடை செய்தால் 75 கிலோ எடை கொண்ட 50 மூட்டை முதல் 60 மூட்டை வரை கிடைக்கும்.

Tags : opening ,places ,paddy purchasing center ,Ariyalur district ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!