வேதாரண்யம் அருகே வாலிபரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

வேதாரண்யம், ஜன.29: வேதாரண்யத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் நாகலிங்கம் (34). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு தனது பைக்கிள் கரியாபட்டினம் வழியாக வேதாரண்யம் வந்துகொண்டிருந்தார். அப்போது சாருமடை கடைவீதி அருகே ஒரு கும்பல் நாகலிங்கத்தை வழிமறித்து தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த 2 ஆயிரம் பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்து நாகலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ் சந்திரபோஸ் வழக்குபதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேதாரண்யத்தை சேர்ந்த செந்தில்குமார் (35), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மோனிஷ்ராஜ் (23), முத்து(21) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சாம்ராஜ் என்பவரை தேடி வருகிறார்கள்.

Tags : persons ,Vedaranyam ,
× RELATED திருப்பாலைக்குடி அருகே மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு