×

ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.77 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி, ஜன. 29: ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பெல்மந்தாடா கனாகம்பை பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61.75 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை பணி நடக்கிறது. பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கனாகம்பை பகுதியில் ரூ.1.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பில் கனாகம்பை துவக்கப்பள்ளி தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தும்மனட்டி ஊராட்சிக்குட்பட்ட கப்பச்சி பாகலா பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.45 லட்சம் மதிப்பில் கப்பச்சி முதல் பாகலா வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பென்ஹட்டி பகுதியில் தேயிலை தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி கோரிய இடத்தினையும், கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட தீனட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையினையும் ஆய்வு செய்தார்.

கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட தீனட்டி, மசக்கல் பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி கோரிய இடங்களையும், கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னத்தலை கோவில்மேடு பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.92 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணியினை ஆய்வு செய்தார். கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட குடுமணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய பழுதுபார்ப்பு பணி என மொத்தம் ரூ.1.77 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். கனாகம்பை துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தின் சமையற்கூடம் மற்றும் கழிப்பறை வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) கெட்சி லீமா அமாலினி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், சந்திரசேகர், கக்குச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Collector ,area ,Ooty Panchayat ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...