சாலையில் குழி தோண்டியதால் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு

வால்பாறை, ஜன.29:  வால்பாறை அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்ட நெடுஞ்சாலைதுறையினர்  தோண்டிய குழியால் 400 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் புகார் எழுந்துள்ளது. வால்பாறையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகே, வால்பாறை கல்லுாரி மைதானத்தின் முன்பு கேரளா செல்லும் சாலையின் குறுக்கே முன் அறிவிப்பின்றி, திடீரென தோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையின் குறுக்கு எச்சரிக்கை பலகை இல்லாமல் நெடுஞ்சாலை துறை தோண்டிய குழியால் பாதுகாப்பு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குழியால் 400 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. முன்னறிப்பு இல்லாமல் குழி தோண்டி உள்ளதாக நெடுஞ்சாலை துறை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட பின் குழி தோண்ட ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மாநகராட்சி குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு