×

6 அடி உயரத்தில் தக்காளி செடி

பரமக்குடி, ஜன.28: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் 6 அடிக்கு மேல் வளர்ந்த தக்காளி செடியை பலர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பரமக்குடி அருகே பார்த்திபனூர் நெல்மடூர் கிராமத்தில் ராணி என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியில் தானாகவே தக்காளி செடி ஒன்று முளைத்துள்ளது. இதனை தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்துள்ளார். கடை நெடுஞ்சாலை ஒட்டி இருப்பதால் ஆடு மாடுகள் மேய்ந்து விடாதவாறு, சுற்றி கம்பி வேலி அமைத்து பராமரித்து வந்துள்ளார்.இந்நிலையில் தக்காளி செடி மரத்தைப் போல் ஆறு அடிக்கு மேல் வளர்ந்துள்ளது, செடியில் காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகிறது. இந்த செடியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 1 கிலோ வீதம் பறிக்கப்படுகிறது. தக்காளிச் செடி சாதாரணமாக 1 அடி முதல் 3 அடி வரை வளரும். ஆனால், இங்கு தக்காளி செடி 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துள்ளது. தக்காளி செடி 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துள்ளதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை