×

ஆர்.புதுப்பட்டியில் 6 மணி நேரம் மின்தடை

நாமகிரிப்பேட்டை, ஜன.28: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில், 6 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.  நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அதற்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி வருகின்றனர். இந்நிலையில், கள்ளவெளி பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக நேற்று மதியம் 1 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் போதிய மின்சார ஊழியர்கள் இல்லாமலும், பொக்லைன் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை 6 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் தொடர் புகார் செய்தனர். இதை தொடர்ந்து அவசரமாக பொக்லைனை வரவழைத்து பணிகள் முடிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம், இரவு 7மணி வரை தடைபட்டதால் பொதுமக்கள், தொழில் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  

Tags : R. Pudupatti ,
× RELATED ஆர்.புதுப்பட்டி அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா