×

கல்லூரி மாணவர்களுக்கு அனிமேஷன் பயிற்சியளிக்க இந்துஸ்தான் கல்லூரியுடன் மேக் அனிமேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை,ஜன.28: இந்தியாவில் முதன்முறையாக கல்லூரி மாணவர்களுக்கு அனிமேஷன் பயிற்சி அளிக்கும் வகையில் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரி மற்றும் மேக் அனிமேசன் நிறுவனம்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் சரவணம்பட்டியில் உள்ள மேக் அனிமேசன், டி.ஜே எஜுகேசன் மற்றும் ட்ரெய்னிங் நிறுவன இயக்குனர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் கூறியதாவது, இந்தியாவில் முதல் முறையாக விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு அனிமேஷன் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் பிற துறைகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து படிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அனிமேஷன், வி.எப்.எக்ஸ் துறைக்கு கடும் கிராக்கி உள்ளது. இந்த படிப்பினால் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  எட்டாம் வகுப்பு முதல் மருத்துவம், பொறியியல் படித்த மாணவர்கள் வரை இதனை ஆர்வமாக கற்று வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின்போது விஷூவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் சார்லஸ், மேக் நிறுவனத்தின் பிரேம், ஆஷா,சாஸ்தாகுமார் ஆகியோர் இருந்தனர்.

Tags : college students ,Hindustan College ,
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...