×

சோழவரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

புழல், ஜன. 28: சோழவரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சோழவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் சோழவரம் பெரிய காலனி அரசு ஆதி திராவிடர் நலத்துறை துவக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் படிக்கும் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவர்களுக்கு உதவிகள் செய்யக்கோரி பள்ளி தலைமையாசிரியர்கள் உமா, சாந்தி ஆகியோர் சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் சுகவேணி முருகனை நேரில் சந்தித்து கோரிக்கை வழங்கினர். இதனையடுத்து மேற்கண்ட இரண்டு பள்ளிகளுக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு தட்டு, டம்ளர் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.

சோழவரம் தெற்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் முகிலன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர்கள் உமா, சாந்தி, சோழவரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் திமுக ஒன்றிய கவுன்சிலர் சுகவேணி முருகன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தட்டு, டம்ளர் மற்றும் படிப்பதற்கான பள்ளி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் நீலகண்டன், ஜாகீர்உசேன், குமார், ரமேஷ், சிவா, உதயகுமார், நசீர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Welfare Scheme for Cholavaram Public School ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...