×

நாமக்கல்லில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், ஜன.24: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று (24ம் தேதி) மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு காந்தி செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : DMK Working Committee Meeting ,Namakkal ,
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்