×

துப்புரவு பணியாளர் பணி 3 இடங்களுக்கு 23 பேர் போட்டி

உத்தமபாளையம், ஜன.24: உத்தமபாளையம் பேரூராட்சியில் காலியாக உள்ள 3 துப்புரவு பணியாளர்கள் பணிக்கு 23 பேர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் பேரூராட்சியில் 3 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து இந்த காலியிடங்களுக்கு போட்டி போட்டு விண்ணப்ப மனுக்கள் வந்தன.எழுதப்படிக்க தெரிந்தால் மட்டுமே போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் இன்ஜினியர், கல்லூரி, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள், பெண்கள் என 23 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமையில் நேர்காணல் நடந்தது. இதன்பின்பு பட்டியல் மாவட்ட பேரூராட்சிகளின் இணை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `` மொத்தம் 36 நிரந்தர துப்புரவு பணியாளர்களில் காலியாக உள்ள 3 பணியிடங்களுக்கு வந்த 23 விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடந்தது. இதன் பட்டியல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : places ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்