திருப்புத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

திருப்புத்தூர், ஜன.24: திருப்புத்தூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட பிரதிநிதி ஜவஹர்சிவா, ஒன்றிய துணைச் செயலாளர் காட்டாம்பூர் முருகேசன், மாவட்ட மகளிரணித் துணைத் தலைவர் வள்ளி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் அவைத்தலைவர் நாகராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஜி.பாஸ்கரன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் ஆகியோர், எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழகம் அடைந்த பல்வேறு திட்டங்கள், அதனால் அடைந்த பயன்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட புதுத்தெரு முருகேசன், மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகர் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.

Tags : MGR ,Thirupputhur ,
× RELATED விருதுநகரில் குண்டும், குழியுமான எம்ஜிஆர் ரோடு