×

சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

சிவகங்கை, ஜன. 24: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்.1தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்.1 தேர்வு மூலம் 18துணை ஆட்சியர், 19டிஎஸ்பி, 10உதவி ஆணையர் (வணிகவரித்துறை), 14கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், 7உதவி இயக்குநர்(கிராம வளர்ச்சித்துறை), ஒரு மாவட்ட அலுவலர்( தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி) ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜன.27முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தினமும் காலை 11மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு வாரம் இரு முறை மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, தங்களது பெயர்களை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் விபரங்கள் அறிய 04575-240435என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga Employment Office ,
× RELATED ரூ.1 கோடி தங்கம் கடத்தல்: வாலிபர் அதிரடி கைது