கண் சிகிச்சை முகாம்

காங்கயம், ஜன.23: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சிறப்பு கண் சிகிச்சை முகாம் காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.31வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த கண் சிகிச்சை முகாமை காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், காங்கயம் காவல்துறை, திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தின.

காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் துவக்கி வைத்தார். முகாமில், காங்கயம் பகுதியில் உள்ள பேருந்து, லாரி ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்து, கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், காங்கயம் காவல் உதவி ஆய்வாளர்கள் முருகானந்தம், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Eye Treatment Camp ,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு