×

க.பரமத்தி ஒன்றியத்தில் 90 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

க.பரமத்தி ஜன. 21: க.பரமத்தி ஒன்றியத்தில் 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 22துணை சுகாதார நிலையம், ஒன்றிய துவக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 90 மையங்களில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னதாராபுரம், பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய 7 ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் செயல்படும் 22 துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிமையங்கள் என க.பரமத்தி ஒன்றியத்தில் 90 மையங்களில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதே போல கரூர் ஒன்றியம் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆத்தூர்பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நத்தமேடு, பெரியவடுகபட்டி, காந்திநகர் நத்தமேடு ஆகிய அங்கன்வாடி மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இதில் தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நத்தமேடு அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் செல்லை சிவா தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமணி கருணாநிதி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதேபோல் ஒன்றியத்தில் மற்ற மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,centers ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...