×

மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கல்

விருதுநகர், ஜன. 20: விருதுநகர் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக 1168 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட 1,50,136 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விருதுநகரில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் கண்ணன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.28 நடமாடும் குழுக்கள் மூலம் இலங்கை அகதி முகாம்கள், நரிக்குறவர்கள், தற்காலிக குடியிருப்புகளிலும், 46 நடமாடும் குழுக்கள் மூலம் ரயில்நிலையம், தியேட்டர்கள், பஸ்நிலையம், கோயில்கள், திருவிழாக்கள், திருமண விழாக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் 4,580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

செவல்பட்டியில் கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் செல்வியும், ரோசல்பட்டி ஊராட்சி மையத்தில் ஊராட்சி தலைவர் டாக்டர் தமிழரசியும், சிவஞானபுரம் ஊராட்சி மையத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தியும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் நடந்த போலியோ முகாம்களை அந்தந்த ஊராட்சி தலைவர் சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தனர்.

Tags : children ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...