தமிழர் பண்பாட்டு கலைத்திருவிழா

காரைக்குடி, ஜன.20:  காரைக்குடியில் கவனக்கலை மன்றம், காஸ்மாஸ் லயன்ஸ் கிளப், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ், சில்வர் ஸ்டார் கழகம், சிகரம் பெண்கள் சதுரங்கக்கழகம் சார்பில் தமிழர் பண்பாட்டுக் கலைத்திருவிழா நடந்தது. மாவட்டத் கவனக்கழக கலைமன்றத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன் முன்னிலை வகித்தார். காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் தலைவர் பழநியப்பன், சேர்மன் சரவணன், மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவனக்கலைமன்ற புரவலர் அழகப்பன், கவிஞர் தென்றல், ஆசிரியர்கள் ராஜ்குமார், லட்சுமி, சொல்லரசி அகிலா, முனைவர் மேகலாதேவி, ஆசிரியர் அல்போன்ஸ், டாக்டர் ஏஜிபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளக்கேற்றுதல், கோலமிடுதல், செதுக்கும் சிற்பம், பல்லாங்குழி, தாயம், சொட்டாங்கல், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், குறள் ஒப்பித்தல், பம்பரம் சுற்றல், நினைவாற்றல் உள்பட 30க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மன்றப் பொருளாளர் உமா நன்றி கூறினார்.

Tags : Tamil Cultural Art Festival ,
× RELATED சிவகங்கை போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு ஸ்டாக் இல்லை