தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புளியங்குடி, ஜன.20: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி சேர்மன் தங்கப்பழம் தலைமையில் தாளாளர் முருகேசன் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் காந்திராமன் வரவேற்றார். இதில் சுமார் 250 முன்னாள் மாணவர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் குமரகுருபரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி சேர்மன், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : alumni ,Golden Ball Polytechnic College ,
× RELATED முன்னாள் மாணவர் சந்திப்பு