பைக் மீது கார் மோதி முதியவர் பலி

கரூர், ஜன. 20: கரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார். கரூர் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கோதூரைச் சேர்ந்தவர் மொட்டையப்ப கவுண்டர்(65). இவர் தனது நண்பர் இளங்கோவன் என்பவருடன் பைக்கில் கோவை ரோட்டில் சென்றார். பைக்கை மொட்டையப்ப கவுண்டர் ஓட்டிச் சென்றார். கரூர் கோவை சாலை ரெட்டிப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த மொட்டையப்ப கவுண்டர் இறந்தார். காயமடைந்த இளங்கோவன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக...