விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் சோழவந்தானில் 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சு

சோழவந்தான், ஜன.20: சோழவந்தானில் 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் தன் வீட்டில் வளர்த்த கோழியை முட்டைகளுடன் அடை கூட்டி வைத்தார். இவை இருபத்தி இரண்டு நாட்கள் கழித்து எட்டு குஞ்சுகள் பொறித்தது. இதில் ஒரு குஞ்சு மட்டும் வித்தியாசமாக நான்கு கால்களுடன் இருந்தது. முன் பகுதியில் வழக்கம் போல் ஐந்து விரல்களுடன் கூடிய இரண்டு கால்களும், பின்புறம் ஒரே விரலுடன் கூடிய வால் போல், உயரம் குறைவான இரண்டு கால்களும் இருந்தன. இதைப் பார்த்த ராமகிருஷ்ணன் குடும்பத்தார் இக்குஞ்சு உயிர் பிழைக்குமா என்றும், மற்ற குஞ்சுகளைப் போல் நடக்குமா என்றும் சந்தேகக்பட்டனர்.

ஆனால் இரண்டு நாட்களில் இக்குஞ்சு மற்ற குஞ்சுகளைப் போல நடந்தும், துள்ளி ஓடியும் விளையாடியது. முன்பக்கம் உள்ள இரு கால்களில் மட்டுமே இந்த குஞ்சு நடக்கிறது. பின்புறம் உள்ள இரு கால்கள் பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் பின்புற கால்களை இருக்கை போல் பாவித்து சில நேரம் ஒய்யாரமாக அமர்ந்து ஆச்சர்யமூட்டுகிறது.ஏற்கனவே நான்கு முறை குஞ்சுகள் பொறித்த கோழி, ஐந்தாவது முறையாக அடை கூட்டியதில் இந்த அதிசய குஞ்சு பிறந்துள்ளது.தாய் கோழியுடனும், மற்ற குஞ்சுகளோடும் இணைந்து விளையாடும் இந்த அதிசய கோழிக் குஞ்சை இப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.

Tags : Motorists ,accident ,
× RELATED வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து...