×

மாதிரவேளூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் சொட்டுமருந்து முகாமில் ஊராட்சி தலைவர் தகவல்

கொள்ளிடம், ஜன.20: கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்றத்தலைவர் தெரிவித்தார். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் பேசுகையில், மாதிரவேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் மற்றும் உள்ளூர் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையை ஒட்டியுள்ள கடலூர் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில் இரவும் பகலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் அவர்களின் வசதிக்கேற்றவாறு சுகாதாரநிலையத்தையொட்டி குடியிருப்பு வீடு கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, மருத்துவ அலுவலர் மணிமாறன், மருந்தாளுநர் மணிமாறன், சுகாதார ஆய்வாளர் சதிஷ்குமார், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாதிரவேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதுக்குட்பட்ட 1,514 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Tags : nurses ,
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...