×

தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 1196 செவிலியர்களுக்கு இன்று பணி ஆணைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் பேறுகால பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவின் கூடுதல் தளங்கள் கட்டுவதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஒப்பந்த செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் 483 கண்டறியப்பட்டு அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்து பணி ஆணைகள் இன்று வழங்க உள்ளோம். அதேபோல கொரோனா காலத்தில் எம்ஆர்பி மூலம் 713 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தற்காலிகமாக பணியாற்றும் 1,196 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வழங்கப்படும். கோபிமஞ்சூரியன் கர்நாடகாவில் தடை செய்துவிட்டதால் இங்கு தடை செய்ய முடியாது. உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. உடலுக்கு அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பொருட்கள் தடை செய்யப்பட்டு வருகிறது என்றார்.மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் தீர்த்தலிங்கம், முதன்மை மருத்துவ அலுவலர் கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர். கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 1196 செவிலியர்களுக்கு இன்று பணி ஆணைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Saidapet Government Suburban Hospital ,
× RELATED தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி...