மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

பெரம்பலூர், ஜன 19: பெரம்பலூரில் மாற்றுக் கட்சியினர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியம் வடக்கலூர் கிராமத்தில் அதி.மு.க - பாஜக.- தேமுதிக. ஆகிய கட்சிகளில் இருந்து விலகி, திமுக ஒன்றியச் செயலாளர் மதியழகன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ராசா முன்னிலையில், வழக்கறிஞர் தங்கராஜ், பொறியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திமுக.வில் இணைந்தனர். மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான குன்னம் ராஜேந்திரன் , மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் துரைசாமி, மாநில மருத்துவரணி துனை செயலாளர் டாக்டர் வல்லபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : alternative parties ,DMK ,
× RELATED ஜெயங்கொண்டம் பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்