உளுந்து அறுவடை பாதிப்பு அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா

பெரம்பலூர், ஜன 19: தமிழ்நாடு அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா பெரம்பலூரில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் முத்துகுமார்தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தங்கப்பாண்டி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வகுமார், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் போக்குவரத்து ஆய்வாளர் கோபிநாத், சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சுரேஷ், நிர்வாகி வேலுச்சாமி, அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் சங்கர், பஞ்சநாதன், வாசு உள்ளிட்ட பல்வேறு ஓட்டுநர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வடிவேல் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags : Festival ,All Drivers Association ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்