சிவகங்கை சமத்துவபுரத்தில் பொங்கல் விழா

சிவகங்கை, ஜன. 19: சிவகங்கை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். 5வது வார்டு திமுக உறுப்பினர் மகுடபதி முன்னிலை வகித்தார். அனைவரும் சமத்துவபுர பொட்டலில் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி ,பானை உடைக்கும் போட்டி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : Pongal Festival ,Sivaganga Samawapuram ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா