திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு

திருப்போரூர், ஜன.19: கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லி. இவரது மகன் அலெக்சாண்டர் (27). திருமணம், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் உள்பட பல நிகழ்ச்சி களுக்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அலெக்சாண்டர், கோயில் நிகழ்ச்சி ஒன்றில் அலங்கார விளக்குகள் அமைக்க சென்றார். அங்கு அமைத்து கொடுத்து விட்டு, இரவு 8 மணியளவில் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது, எதிரே அசுர வேகத்தில் வந்த கார், அவரது பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில்  தூக்கிவீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், அலெக்சாண்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.தகவலறிந்து காயார் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், அவரது தந்தை டில்லி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Car collision ,Tiruppore ,
× RELATED பஸ்-கார் மோதல்; போக்குவரத்து பாதிப்பு