செட்டிநாடு பள்ளியில் பொங்கல் வைத்து அசத்திய ஜெர்மனி நாட்டு மாணவிகள்

காரைக்குடி, ஜன.14: காரைக்குடி அருகே செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் ஜெர்மன், இத்தாலி நாட்டு மாணவிகள் தமிழர் பாண்பாட்டின்படி உடைஅணிந்து பொங்கல் வைத்து அசத்தினர். காரைக்குடி அருகே செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாப்பட்டது. கல்விகுழு துணை தலைவர் அருண் வரவேற்றார். கல்விகுழும தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சாந்திகுமரேசன் முன்னிலை வகித்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து ஏஎப்எஸ் திட்டத்தின் கீழ் இப்பள்ளியில் படிக்கும் ஜெர்மன், இத்தாலி நாட்டு மாணவிகள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உறியடித்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இத்தாலி நாட்டு மாணவி மரியா கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் இப்பள்ளிக்கு படிக்க வந்தேன். தமிழக உணவு பொருட்கள் அனைத்திலும் மசாலா பொருட்கள் சேர்ப்பதால் சுவை, மணம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற கலாச்சார விழாக்கள் எங்கள் நாட்டில் இல்லை. இந்த விழாவில் கலந்து கொண்டது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அனுபவம் என்றார்.

Tags : Chetinad ,school students ,
× RELATED மாவட்ட அளவிலான தடகள போட்டி...