×

விவசாயிகளுக்கு பயிற்சி

சிவகங்கை, ஜன. 14:  சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குநர் சசிகலா தலைமையில் வகித்தார். தற்போது சாகுபடி செய்துள்ள நெல்வயல்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரம் மேலாண்மை முறைகள், குருத்துப்பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து தொழில்நுட்ப செய்திகள், செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மானிய திட்டங்கள், கூட்டுப்பண்ணையம் திட்டம், கூட்டுப்பயிர் சாகுபடி, பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பண்ணை இயந்திரம் பராமரிப்பு செய்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் திருமலை ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி