×

‘ஆலயம் டிராபி’ கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கோவை, ஜன.14: கோவை வடவள்ளி வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் ‘ஆலயம் டிராபி’ க்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. கடந்த 10ஆம் தேதி துவங்கிய போட்டி 3 நாள் நடந்தது. ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம், ராமநாதபுரம் மைதானத்தில் ரெட் டென்னிஸ் பந்து பயன்படுத்தி நாக் அவுட் முறையில் 10 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் 32 அணிகள் பங்கேற்றது. இறுதி சுற்று போட்டியில் யுனிக் கிரிக்கெட் அணி முதல் இடத்தையும், சகலை கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும், எம்.சி.சி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதுதவிர மேன் ஆப் தி சீரியஸ் ஆக தேர்வு பெற்றவருக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆலயம் டிராபி கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ஆலயம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர்,  ஆலயம் அறக்கட்டளை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் கலந்துகொண்டு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

ஆலயம் டிராபி போட்டியில் பங்கேற்க கோவை மாநகராட்சி பகுதியில் இருந்து 72 அணிகள் விண்ணப்பித்திருந்தது. இதில் 32 அணிகள் தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற அணிகள் சிறந்த முறையில் திறமை காட்டி விளையாடியது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக கபடி, பூப்பந்து, இறகு பந்து, டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.  ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கப்படும். இதுபோன்ற போட்டிகள் மூலமாக விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை காட்ட முடியும் என ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை இயக்குனர் ஷர்மிளா சந்திரசேகர் தெரிவித்தார்.



Tags : Temple Trophy' Cricket Gifting Ceremony ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை