அம்மாப்பேட்டையில் கூட்டு பண்ணைய திட்ட குழுக்களுக்கான ஆய்வு கூட்டம்

பாபநாசம், ஜன. 14: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் வட்டார கூட்டு பண்ணைய திட்ட குழுக்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா பங்கேற்று பேசும்போது, கூட்டு பண்ணைய திட்ட குழுக்கள் பண்ணை எந்திர மயமாக்கல் திட்டத்தில் பயன்பெற குழு தீர்மானம் போட்டு நகலை தர வேண்டும். கூட்டாக இடுபொருட்களை வாங்கி பயனடைய வேண்டும். கடந்த ஆண்டுகளில் வாங்கப் பட்ட அயந்திரங்களை கொண்டு வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்தி முன்னேற வேண்டும் என்றார். ஏற்பாடுகளை அட்மா மேலாளர் செல்வி, வேளாண் அலுவலர் ராஜதுரை செய்திருந்தனர்.

Tags : Research Meeting for Joint Farm Project Groups ,
× RELATED விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரசு,...