சீர்காழியில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது


சீர்காழி, ஜன.14: சீர்காழியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கீழத் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை மேலாளர் ரவி. இவரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாயில் நேற்று நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ரவி குடும்பத்தினர் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்றவரான பாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பாண்டியன் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட பாம்பு 6 அடி நீளம் கொண்டது. பாம்பு பிடிபட்டதால் ரவி குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags : house ,officer ,Sirkazhi ,
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி கருநாகம்