×

லோக் அதாலத்தில் 1,775 வழக்குகளுக்கு தீர்வு

சிவகங்கை, டிச.16: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 775 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11 மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 631 குற்றவியல் வழக்குகள், 30 செக் மோசடி வழக்குகள், 56 வங்கிக்கடன் வழக்கு, 60 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 26 குடும்ப பிரச்சினை வழக்கு, 26 சிவில் வழக்கு என மொத்தம் ஆயிரத்து 775 சமரசமாக முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.3 கோடியே 55 லட்சத்து 94 ஆயிரத்து 204க்கு தீர்வு காணப்பட்டது. இதுபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 168 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இதில் 142 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.56 லட்சத்து 63 ஆயிரம் வங்கிகளுக்கு வரவானது. சிவகங்கை மாவட்ட நீதிபதி ரஃபி, நீதிபதிகள் செம்மல், தமிழரசி, பாபுலால், ராஜேஸ்வரி, பாரதி, பாரததேவி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் மணிமேகலை, பானுமதி, விவேகானந்த் மற்றும் தன்னார்வலர்கள் லோக் அதாலத் ஏற்பாடுகளை செய்தனர்.


Tags : Lok Adalat ,
× RELATED சிவகாசியில் லோக் அதாலத் மூலம் 694 வழக்குகளுக்கு தீர்வு