காளையார்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

காளையார்கோவில், டிச. 13:  காளையார்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட புலியடிதம்மம்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து விலகி திமுவில் இணைந்தனர்.
திமுக மாவட்ட பிரதிநிதி கந்தசாமி தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர். பின்பு அனைவரும் திமுகவின் வளர்ச்சிப் பணிக்காக செயல்பட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி எடுத்தனர். இவர்கள் திமுக வில் இணைந்ததை கொண்டாடும் வகையில் புலியடிதம்மம் கிராமம் பஸ்நிலையத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வாங்கப்பட்டது.

Tags : DMK ,Kaliyarikovil ,
× RELATED காளையார்கோவிலில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி