பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர், டிச. 13: திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குளமாக தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் இருந்து மணவாளநகரை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக சித்தி விநாயகர் கோயில் தெரு, ரயில் நிலையம் செல்பவர்கள் சென்று வருகின்றனர்.

இங்கு துர்நாற்றம் வீசி வருவதால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway bridge ,
× RELATED சரபங்கா ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடும் துர்நாற்றம்