×

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இலுப்பூர், டிச.13: ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அன்னவாசல் ஒன்றியம் மற்றும் இலுப்பூர். அன்னவாசல் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முதியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரஜினி மக்கள் மன்ற தலைவர் ரஜினியின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி கடந்த 3ம்தேதி முதல் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 3ம்தேதி இலுப்பூர் பிடாரியம்மன் கோயில், 4ம் தேதி நவம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், 5ம் தேதி பொன்வாசிநாதர் கோயில், 7ம் தேதி கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், 8ம் தேதி புனித அந்தோணியார் ஆலயம், 9ம்தேதி இரட்டை பிள்ளையார் கோயில், 10ம் தேதி மலைக்குடிபட்டி சித்தி விநாயகர் கோயில், 11ம் தேதி அன்னவாசல் சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று இலுப்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு போர்வை, கொசுவலை. வாளி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை அன்னவாசல் ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர் லட்சுமணன் வழங்கினார். மேலும் ரஜினிகாந்த் பிறந்த தினமான நேற்று முதியோருக்கு உணவும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு இலுப்பூர் காளிஅம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் துணை செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர்கள் ஜேசுதாஸ், சேவியர் கோமாஸ், புருஷேத்தமன், அன்னவாசல் நகர நிர்வாகிகள் பாண்டியன், ரஜினி சுரேஷ், சலீம் இலுப்பூர் நகர நிர்வாகிகள் பாஸ்கர், ராஜா, உமாசங்கர், மோகன், விக்கி, தினேஷ்குமார், அரவிந்தன் உள்பட திரளாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : elderly ,Rajini People's Forum ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு